உள்துறை மந்திரியின் வீட்டை சூறையாடிய கும்பல் ... ... போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
Daily Thanthi 2024-08-05 10:30:42.0

உள்துறை மந்திரியின் வீட்டை சூறையாடிய கும்பல்

டாக்காவின் தன்மோண்டியில் உள்ள உள்துறை மந்திரி அசாதுஸமான் கான் கமாலின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கி சேதப்படுத்தியதாக புரோதோமோ அலோ செய்தி வெளியிட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கேட்டை உடைத்து உள்துறை அமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்கி உள்ளனர். உள்ளே இருந்து கரும்புகை வெளியானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தாக்குதல் நடத்துகின்றனர். 


Next Story