வில்வித்தை:   வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 07:03:40.0

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 84ல் இந்தியா - வியட்நாம் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 146-142 என்ற புள்ளி கணக்கில் வியட்நாம் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 85-ல் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. இப்போட்டியில் 146-145 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 89ல் இந்தியா - ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் 146-141 என்ற புள்ளி கணக்கில் ஈராக் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதிகா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 92ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 148-146 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி வெற்றிபெற்றார்.

1/8 எலிமினேஷன் சுற்றில் வெற்றிபெற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். 


Next Story