வில்வித்தை:  வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 06:20:53.0

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 56-ல் இந்தியா - சவுதி அரேபியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 147-139 என்ற புள்ளி கணக்கில் சவுதி வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 57-ல் இந்தியா - குவைத் அணிகள் மோதின. இப்போட்டியில் 148-138 என்ற புள்ளி கணக்கில் குவைத் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 65ல் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் 145-132 என்ற புள்ளி கணக்கில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதிகா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 72ல் இந்தியா - நேபாளம் மோதின. இப்போட்டியில் 149-137 என்ற புள்ளி கணக்கில் நேபாள வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் அடுத்த சுற்றான 1/8 எலிமினேஷன் சுற்றுக்கு முன்னேறினர். 


Next Story