19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-19 10:33:38.0

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெறுகின்றன. ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியாக கருதப்படும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இந்தியா சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் 41 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

வரும் 23 ஆம் தேதி தொடக்க விழா நடைபெறுகிறது. நிறைவு விழா அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும். அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறும்.

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு (2022) நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story