துப்பாக்கி சூடு.. வெடிகுண்டுகள் வீச்சு:... ... 27-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-27 10:49:38.0
t-max-icont-min-icon

துப்பாக்கி சூடு.. வெடிகுண்டுகள் வீச்சு: மணிப்பூரில் மீண்டும் தாக்குதல்

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கிராமங்கள் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். சனசாபி, தாம்னபோப்கி ஆகிய கிராமங்களை குறிவைத்து துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் அந்த கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. 


Next Story