மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்:... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-26 14:15:21.0
t-max-icont-min-icon

மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் திமுகவின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான திமுக நோட்டீஸ், முரசொலி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் வலுக்கிறது. எனவே இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை. எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story