டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வு செய்ய மத்திய அரசு... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 14:02:13.0
t-max-icont-min-icon

டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9-ந்தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் , டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .


Next Story