காசா அருகே முகாமிட்டு இருக்கும் இஸ்ரேலிய ராணுவ... ... 14வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது...!
Daily Thanthi 2023-10-20 07:42:56.0

காசா அருகே முகாமிட்டு இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். இஸ்ரேலிய வீரர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ” சிங்கம் போல ராணுவ வீரர்கள் போரிட்டார்கள். தொடர்ந்து இப்படியேதான் போரிடுவார்கள்” என்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 14-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் தயாராக இருக்கிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட ஒருவார காலமாக எல்லையில் முகாமிட்டு இருக்கும் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.


Next Story