இஸ்ரேல் தாக்குதலில் காசா தேவாலய வளாகத்தில் பலர்... ... 14வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது...!
x
Daily Thanthi 2023-10-19 22:51:54.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் தாக்குதலில் காசா தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தகவல்

காசா சிட்டி,

காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் வளாகத்தில் "பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்" ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியது.

பாலஸ்தீன பகுதியில் போர் மூண்டதால், பல காசா வாசிகள் தஞ்சம் புகுந்திருந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் உள்ள இலக்கை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.


Next Story