‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த... ... 118-வது பிறந்தநாள்  சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
Daily Thanthi 2022-09-27 06:21:59.0
t-max-icont-min-icon

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். 'தினத்தந்தி' பத்திரிக்கையை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றியவர் சி.பா.ஆதித்தனார் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story