இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2025-01-04 07:56:58.0
t-max-icont-min-icon

இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்

மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று அதிகாலை 3.20 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறந்த இயற்பியலாளரும் இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் ராஜகோபால சிதம்பரம் 1975 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story