அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
Daily Thanthi 2025-01-02 03:05:24.0
t-max-icont-min-icon

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24- ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

'பெஞ்ஜல்' புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story