புதிய உச்சத்துடன் நிறைவடைந்த மும்பை பங்குச்சந்தை


புதிய உச்சத்துடன் நிறைவடைந்த மும்பை பங்குச்சந்தை
x

மும்பை பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.

மும்பை,

மும்பை பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. 2-வது நாளாக பங்குகள் லாபத்துடன் கைமாறின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 90.88 புள்ளிகள் உயர்ந்து 83,079.66 என்ற உச்சத்தில் நிலைத்தது. பகலில், இது 163.63 புள்ளிகள் வரை அதிகரித்து 83,152.41 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து 25,418.55 என்ற உச்சத்தில் நிலைத்தது. பேங்க் நிப்டி 35.50 புள்ளிகள் அதிகரித்து 52,188.65 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

பார்தி ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டன், லார்சன் அண்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஐடிசி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை பின்னடைவைச் சந்தித்தன.

ஆசிய சந்தைகளில், ஹாங்காங் லாபத்துடன் நிலைபெற்றது, டோக்கியோ சரிவுடன் முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் சாதகமான நிலையில் வர்த்தகமாகின.

காய்கறிகள், உணவு மற்றும் எரிபொருள் விலை குறைவு காரணமாக பணவீக்கம் 1.31 சதவீதமாக குறைந்துள்ளது என்று அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை பங்குச்சந்தை நேற்று 97.84 புள்ளிகள் உயர்ந்து 82,988.78 என்ற புதிய சாதனை படைத்தது. நிப்டி 27.25 புள்ளிகள் உயர்ந்து 25,383.75 புள்ளிகளில் நிலைத்தது.

இதன்படி மும்பை பங்குச்சந்தையில் இன்று 2-வது நாளாக வர்த்தகர்களுக்கு சாதகமான நிலை இருந்தது. பங்குகள் லாபத்துடன் கைமாறின.


Next Story