வீடுகளின் விலை அதிகரிப்பு: சர்வதேச பட்டியலில் 2 இந்திய நகரங்களுக்கு இடம்


வீடுகளின் விலை அதிகரிப்பு: சர்வதேச பட்டியலில் 2 இந்திய நகரங்களுக்கு இடம்
x
தினத்தந்தி 24 Aug 2024 3:19 AM GMT (Updated: 24 Aug 2024 4:58 AM GMT)

வீடுகளின் விலை அதிகம் உயா்ந்த உலகின் முக்கிய 44 நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்திலும் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளன.

சர்வதேச அளவில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்த முக்கிய நரங்களின் பட்டியலில் மும்பையும் டெல்லியும் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களில் உள்ளன.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான 'கிங் ப்ராங்க்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்த உலகின் முக்கிய 44 நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்திலும் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளன

இந்த தரவரிசையில் பெங்களூரு நகரம் 15-வது இடத்தில் உள்ளது.இது தவிர, இந்தப் பட்டியலில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் 8.9 சதவீத விலை உயா்வுடன் 4-வது இடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து மியாமி , நைரோபி , மேட்ரிட் , லிஸ்பன் , சியோல் , சான் பிரான்சிஸ்கோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளது.


Next Story