தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?


தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 23 July 2024 4:58 AM GMT (Updated: 23 July 2024 5:41 AM GMT)

தங்கம் விலை இந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.95.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story