பாரீஸ் ஒலிம்பிக்; ஆக்கியில் தொடர்ந்து 2-வது முறையாக... பதக்கம் வென்று இந்தியா சாதனை


பாரீஸ் ஒலிம்பிக்; ஆக்கியில் தொடர்ந்து 2-வது முறையாக... பதக்கம் வென்று இந்தியா சாதனை
x
தினத்தந்தி 8 Aug 2024 7:31 PM IST (Updated: 8 Aug 2024 7:56 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்கள் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின.

இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 52 ஆண்டுகளில் இது முதன்முறையாகும்.

நாட்டின் 4-வது பதக்கம் இதுவாகும். போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (30 மற்றும் 33 ஆகிய நிமிடங்களில்) இந்தியாவுக்கான கோல்களை அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். ஸ்பெயின் அணியின் கேப்டன் மார்க் மிரால்லெஸ் 18-வது நிமிடத்தில் கோல் எடுத்துள்ளார்.

எனினும் போட்டி முடிவில், இந்திய அணி முன்னிலை பெற்றிருந்ததுடன், கோல் கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. ஆனால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.


Next Story