தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது...! ஆசிரியர்களை வணங்கி தேர்வு அறைக்கு சென்ற மாணவிகள்...!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது...! ஆசிரியர்களை வணங்கி தேர்வு அறைக்கு சென்ற மாணவிகள்...!
x
தினத்தந்தி 6 April 2023 10:01 AM IST (Updated: 6 April 2023 10:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,216 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

தமிழகத்தில் 9.22 லட்சம் பள்ளி மாணவர்களும் புதுச்சேரியில் 15,566 பள்ளி மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத்திறனாளிகள், 2,640 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு தேர்வெழுத உள்ளனர்.

தேர்வு எழுத செல்லும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து, திலகம் வைத்து மாணவிகளை தேர்வு அனுப்பி வைத்தனர். இறைவன், ஆசிரியர்களை வணங்கி தேர்வு அறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் செயலால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story