யூலூ வைன் பேட்டரி ஸ்கூட்டர்
யூலூ வைன் நிறுவனம் புதிதாக சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலான பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.55,555. பேட்டரியை கழற்றி மாட்டும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. 100 கி.கி. எடையை இழுக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியை யூமா எனர்ஜி நிறுவனம் அளிக்கிறது.
ஸ்கூட்டருடன் வீட்டிலேயே சார்ஜ் செய்வதற்கு வசதியாக எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான சார்ஜரையும் இந்நிறுவனம் அளிக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் இது 68 கி.மீ. தூரம் வரை ஓடும். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மின்வாகன தயாரிப்பு துணை நிறுவனமான சேடக் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
Related Tags :
Next Story