போக்ஸ்வேகன் டைகுன், வெர்டுஸ் லிமிடெட் எடிஷன்


போக்ஸ்வேகன் டைகுன், வெர்டுஸ் லிமிடெட் எடிஷன்
x

போக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் மற்றும் வெர்டுஸ் மாடலில் லிமிடெட் எடிஷன் கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாடலை வாங்க விரும்பினால் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்து ஆன்லைனில் ஆர்டர் செய்யவேண்டும். ஜி.டி. எட்ஜ் லிமிடெட் எடிஷன் கலெக்ஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கேற்ப தயாரிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உரிய மாறுதல் செய்யப்பட்டு பிரத்யேக காராக அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெர்டுஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார் 6 கியர்களைக் கொண்டிருக்கும். இந்த மாடலின் விலை சுமார் ரூ.16.89 லட்சம். மிகவும் பாதுகாப்பான காராக கருதப்படும் டைகுன் மாடலில் இரண்டு வேரியன்ட்கள் (ஜி.டி. டி.எஸ்.ஜி. மற்றும் ஜி.டி. பிளஸ்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை முறையே சுமார் ரூ.16.79 லட்சம் மற்றும் சுமார் ரூ.17.79 லட்சம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்ப மான வண்ணத்தை தேர்வு செய்யலாம்.


Next Story