போக்ஸ்வேகன் டைகுன், வெர்டுஸ்


போக்ஸ்வேகன் டைகுன், வெர்டுஸ்
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM IST (Updated: 31 March 2023 6:45 PM IST)
t-max-icont-min-icon

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக டைகுன், வெர்டுஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் முகப்பு விளக்கு தானியங்கி முறையில் செயல்படும் வகையிலானது. இது 1 லிட்டர் டி.எஸ்.ஐ. டைனமிக் மற்றும் ஜி.டி. மாடல் 1.51 டி.எஸ்.ஐ. என்ஜினைக் கொண்டது. பனிப் பொழிவிலும் தெளிவாகத் தெரியும் வகையிலான பாக் விளக்கு உள்ளது. முன்பு இத்தகைய பாக் விளக்கு இந்நிறுவனத்தின் பிரீமியர் ரகங்களில் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இவ்விரு மாடல்களுமே பாரத் புகைவிதி சோதனைக்குட்பட்ட வகையிலான டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டவை. 1 லிட்டர் மாடல் 115 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

இது 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 1.5 லிட்டர் மாடல் 150 ஹெச்.பி. திறனை வெளியிடக் கூடியது. 6 கியர்களைக் கொண்டது. ஆட்டோமேடிக் கியர் மாடலில் 7 கியர்கள் உள்ளன. வெர்டுஸ் மாடலின் விலை சுமார் ரூ.11.32 லட்சம் முதல் சுமார் ரூ.18.32 லட்சம். டைகுன் மாடலின் விலை சுமார் ரூ.11.56 லட்சம் முதல் சுமார் ரூ.18.96 லட்சம்.


Next Story