மேம்படுத்தப்பட்ட கியா செல்டோஸ்


மேம்படுத்தப்பட்ட கியா செல்டோஸ்
x

கியா மோட்டார்ஸ் தனது செல்டோஸ் மாடல் காரில் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காருக்கான முன்பதிவு ஜூலை 14-ந் தேதி தொடங்கியுள்ளது. பெட்ரோல், டர்போ டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ள மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முந்தைய மாடலைக் காட்டிலும் இதில் 17 மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் (ஏ.டி.ஏ.எஸ்.) புகுத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் பம்பர் சற்று பெரிய அளவிலும், காரின் நிறத்தில் பாக் விளக்கு, புதிய வடிவில் முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் (டி.ஆர்.எல்.) விளக்கு, இரட்டை வண்ணங்களில் 17 அங்குல அலாய் சக்கரம் மற்றும் பின்புறத்தில் எல்.இ.டி. விளக்குகள் ஆகியன காருக்கு அழகிய தோற்றத்தை அளிக்கின்றன. கண்கவர் இரட்டை வண்ணங்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 360 டிகிரி சுழலும் கேமரா, கிளைமேட் கண்ட்ரோல் வசதி, மேற்கூரை, 8 அங்குல டி.வி. திரை, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், மழை உணர் வைபர், இனிய இசையை வழங்க 8 ஸ்பீக்கர்கள், மன நிலையைப் பிரதிபலிக்கும் வகையிலான விளக்கு வெளிச்சம், டயரின் காற்று அழுத்தத்தை உணர்த்தும் கண்காணிப்பு கருவி, இ.எஸ்.சி. மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியன இந்தக் காரின் சிறப்பம்சங்களாகும். முன்புற மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை, பிளைன்ட் ஸ்பாட் மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை, லேன் மாறுவதை எச்சரிப்பது மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 ஹெச்.பி. திறன் மற்றும் 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், 1.5 லிட்டர் டர்போ டீசல் 116 ஹெச்.பி. திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் 160 ஹெச்.பி திறனையும், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இந்த காரில் டர்போ மாடல் 7 மேனுவல் கியர்களையும், ஆட்டோமேடிக் மாடல் 6 கியர்களையும் கொண்டுள்ளது. ரிவர்ஸ் விளக்கு (பம்பரில்) அழகாக பதிக்கப்பட்டுள்ளது.


Next Story