டாடா அல்ட்ரோஸ் ஐ-சி.என்.ஜி


டாடா அல்ட்ரோஸ் ஐ-சி.என்.ஜி
x

டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் அல்ட்ரோஸ் மாடல் கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதில் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சி.என்.ஜி.யில் இயங்கும் அல்ட்ரோஸ் ஐ-சி.என்.ஜி. மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.21 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

இதில் நான்கு வேரியன்ட்கள் (எக்ஸ்.இ, எக்ஸ்.எம். பிளஸ், எக்ஸ்.இஸட். மற்றும் எக்ஸ்.இஸட். பிளஸ்) வந்துள்ளன. பிரீமியம் மாடலில் 7 அங்குல தொடு திரை உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி மூலம் செயல்படக்கூடிய திறந்து மூடும் மேற்கூரை வசதி கொண்டது. 16 அங்குல சக்கரம் சவுகரியமான பயணத்திற்கு வழிவகுக்கிறது. ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல் வசதி, பாதுகாப்பான பயணத்துக்கு வகை செய்ய 6 ஏர் பேக்குகள் ஆகியவை உள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்தக் கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது வர்த்தக ரீதியில் இது விற்பனைக்காக தயாரிக்கப்படுகிறது. இதில் இரட்டை டேங்க் முறை அதாவது 30 லிட்டர் டேங்குகள் இரண்டாக பிரிக்கப்பட்டு காரின் அடிப்பகுதியில் இடம்பெறும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இதனால் பொருட்களை வைப்பதற்கான இட வசதி கூடுதலாகக் கிடைத்துள்ளது. இது 5 கியர்களைக் கொண்டது. 77 ஹெச்.பி. திறனையும், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

இதன் விலை சுமார் ரூ.6.45 லட்சம் முதல் சுமார் ரூ.9.10 லட்சம் வரையாகும்.


Next Story