மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா
கார் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடம் வகிக்கும் கொரிய நிறுவனமான ஹூண்டாய் தயாரிப்புகளில் வெர்னா மாடல் கார் மிகவும் பிரபலமானது. இப்புதிய மாடலில் தற்போது மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் புகுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 65 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இதில் டிரைவர், பயணிகள், பக்கவாட்டுப் பகுதியில் என 6 பாதுகாப்பு ஏர் பேக்குகள் உள்ளன. இவற்றுடன் 65-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.) மற்றும் வி.எஸ்.எம்., ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (ஹெச்.ஏ.சி.), அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், இ.பி.பி., இ.சி.எம்., டி.பி.எம்.எஸ். உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மிகச் சிறப்பான அம்சங்கள் கொண்ட வாகன வரிசையில் இடம்பிடித்துள்ளது.
இதில் 1.5 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 117.5 கிலோவாட் திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும்.
ஹூண்டாய் கார் இணைப்பு செயலியான புளூலிங்க் மூலம் 65-க்கும் மேற்பட்ட சொகுசு அம்சங்களைப் பெறலாம். செடான் பிரிவில் வந்துள்ள வெர்னா மாடல் 6-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலின் விலை சுமார் ரூ.10,89,900 முதல் ஆரம்பமாகிறது. 1.5 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெட்ரோல் மாடலின் விலை சுமார் ரூ.14,86,500 முதல் ஆரம்பமாகிறது.