புதிய ஹூண்டாய் ஐ 20
தமிழகத்தில் பிறந்து உலகெங்கும் பயணிக்கும் காராக கொரிய நிறுவனத்தின் ஹூண்டாய் தயாரிப்புகள் திகழ்கின்றன. இந்நிறுவனத் தயாரிப்புகளில் ஐ 20 மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் தற்போது பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு புதிய ஹூண்டாய் ஐ 20 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக் மாடலில் பாதுகாப்புக்கு அதிகபட்ச முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள், 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிடி நிர்வாகம், மூன்று முனை சீட் பெல்ட் மற்றும் அறிவுறுத்தல், இன்போடெயின்மென்ட், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய சி போர்ட் உள்ளிட்ட வசதிகள் இதன் சிறப்பம்சமாகும். புதிய வடி விலான முகப்பு விளக்கு, முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், 16 அங்குல அலாய் சக்கரம், டி வடிவிலான ஸ்டீயரிங் உள்ளிட்டவை இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இனிய இசையை வழங்க 7 ஸ்பீக்கர் போஸ் சிஸ்டம் உள்ளது. 6 தனித்துவமான வண்ணங்களிலும், 2 இரட்டை வண்ணங்களிலும் கிடைக்கிறது.
இதில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 5 வேரியன்ட்கள் (எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா-ஓ) வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.6.99 லட்சம் முதல் சுமார் ரூ.11 லட்சம்.