எம்.ஜி. கோமெட் இ.வி.


எம்.ஜி. கோமெட் இ.வி.
x

எம்.ஜி. மோட்டார் நிறுவனம் முதல் முறையாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி காரை கோமெட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

பேட்டரி ரக மாடலில் இந்தியாவில் அறிமுகமான கார்களில் இது சிறிய மாடல் காராக இருக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை சுமார் ரூ.10 லட்சம். 2,974 மி.மீ. நீளமும், 1,631 மி.மீ. உயரமும், 1,505 மி.மீ. அகலமும் கொண்டது. இது மூன்று கதவுகளைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாகும்.

இதில் நான்கு பேர் தாராளமாக பயணிக்கலாம். இதில் 20 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 250 கி.மீ. தூரம் வரை ஓடும். இதன் பின்சக்கர அச்சில் ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு செயல்படும் வகையில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.


Next Story