மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் எல்.சி 500.ஹெச்


மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் எல்.சி 500.ஹெச்
x

உயர் ரக பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் தனது எல்.சி 500.ஹெச் மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2.39 கோடி. இதில் புது மாடல் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இடம்பெற்றுள்ளது. இதில் 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் தொடு திரையுடன் உள்ளது. இதன் டேஷ்போர்டு நவீன வடிமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 21 அங்குல அலாய் சக்கரம் உள்ளது. இது 3.5 லிட்டர் வி 6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இத்துடன் கூடுதலாக எலெக்ட்ரிக் மோட்டாரும், அத்துடன் செல்ப் சார்ஜ் வசதிக்கு லித்தியம் அயன் பேட்டரியும் உள்ளது. இதன் என்ஜின் 300 ஹெச்.பி. திறனையும், 348 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை யும் வெளிப்படுத்தக் கூடியது.

இதில் உள்ள மின் மோட்டார் 180 ஹெச்.பி. திறனையும், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். இதிலிருந்து ஒருங் கிணைந்து வெளிவரும் திறன் 354 ஹெச்.பி.யாகும். இதில் 4 கியர்கள் உள்ளன. இதை ஸ்டார்ட் செய்து 4.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும்.


Next Story