கே.டி.எம். 200 டியூக் அறிமுகம்
கே.டி.எம். நிறுவனம் 200 டியூக் 2023 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.96 லட்சம். 199.5 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜினை இது கொண்டுள்ளது. 6 கியர்கள், எல்.இ.டி. முகப்பு விளக்குகள் கொண்டதாக வந்துள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான கே.டி.எம் 1290 மாடல் சூப்பர் டியூக் ஆர் மாடலின் வடிவமைப்பைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 24.68 பி.ஹெச்.பி. திறனையும் 19.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். முன்புறம் 43 மி.மீ அளவிலான யு.எஸ்.டி. போர்க் மற்றும் 10 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் அப்சார்பரைக் கொண்டுள்ளது. இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி, ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), எல்.சி.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர் உள்ளது. இதை ஸ்டார்ட் செய்த 8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும்.
இதன் பெட்ரோல் டேங்க் 13.4 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஒற்றை இருக்கை கொண்டதாக, நீண்ட தூர சாகச பயணம் செல்ல விரும்புவோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ. ஆகும்.