ஹோண்டா டியோ 125


ஹோண்டா டியோ 125
x

ஹோண்டா நிறுவனம் புதிதாக டியோ 125 மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு வேரியன்ட்கள் (ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்மார்ட்) வந்துள்ளன. ஸ்டாண்டர்டு மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.83,400. ஸ்மார்ட் மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.91,300. இந்நிறுவனத்தின் பிற மாடல்களான கிராஸியா மற்றும் ஆக்டிவா மாடல் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் என்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப் பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 8.3 ஹெச்.பி. திறனையும், 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் டிரம் பிரேக்கும் கொண்டுள்ளது. ஸ்மார்ட் சாவி உள்ளதால் அதில் உள்ள பொத்தானை அழுத்தினால் ஸ்கூட்டரின் இன்டிகேட்டர் விளக்குகள் எரிந்து பார்க்கிங் பகுதியில் உள்ள ஸ்கூட்டர் இருக்குமிடத்தை உணர்த்தும். சாவியைப் பயன்படுத்தாவிடில், 20 விநாடிகளில் ஸ்கூட்டர் தானாக லாக் ஆகும் தொழில்நுட்பம் கொண்டது.

ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, அதிர் வில்லாமல் ஸ்டார்ட் ஆகும் வசதி, டிஜிட்டல் டேஷ் போர்டு ஆகியன இதன் சிறப்பம்சமாகும். டிஜிட்டல் மீட்டர் பல்வேறு சிறப்பு செயல் பாடுகளைக் கொண்டதாக வடி வமைக்கப்பட்டுள்ளது.


Next Story