ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440


ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440
x

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிதாக எக்ஸ் 440 மாடல் மோட்டார் சைக்கிளை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2.29 லட்சம். இதில் மூன்று வேரியன்ட்கள் (டெனிம், விவிட் மற்றும் எஸ்) அறிமுகமாகியுள்ளன. விவிட் மாடலின் விலை சுமார் ரூ.2.49 லட்சம், எஸ் மாடலின் விலை சுமார் ரூ.2.69 லட்சம். மஞ்சள், சிவப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும்.

இதில் அலாய் சக்கரம், 440 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், 2 வால்வுடைய என்ஜின் உள்ளது. இது 27 பி.ஹெச்.பி. திறனையும், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இந்த மோட்டார் சைக்கிளில் கூலன்ட், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.

எல்.இ.டி. முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு மற்றும் பின்புறத்தில் எல்.இ.டி. விளக்கு, 3.5 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டி.எப்.டி. டிஜிட்டல் திரையைக் கொண்டது.


Next Story