கிராண்ட் டூரிஸ்மோ
பிரீமியம் மற்றும் சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 6 சீரிஸ் வரிசையில் கிராண்ட் டூரிஸ்மோ எம் ஸ்போர்ட் சிக்னேச்சர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபிள்யூ. 630 ஐ. எம். ஸ்போர்ட் சிக்னேச்சர் என்ற பெயரில் வந்துள்ள இந்த கார் சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் உள்ள இந்நிறுவன ஆலையில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.75.90 லட்சம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் டுவின் பவர் டர்போ தொழில் நுட்பம் கொண்ட இதில் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 258 ஹெச்.பி. திறனை யும், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். 4,400 ஆர்.பி.எம். சுழற்சித் திறன் கொண்டிருப்பதால் இதை ஸ்டார்ட் செய்த 6.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும்.
இதில் 8 கியர்கள், பார்க்கிங் அசிஸ்டன்ட், ரியர் வியூ கேமரா உள்ளது. தானாக பார்க் செய்யும் வசதி உள்ளதால் நெரிசலான பகுதிகளில் எளிதாக பார்க்கிங் செய்ய முடியும். பி.எம்.டபிள்யூ. டிஸ்பிளே சாவி மூலமாக இது செயல்படும். சொகுசான, பாதுகாப்பான காராக இது வந்துள்ளது. இதை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
வெள்ளை, நீலம், கிரே, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.