கருப்பு வண்ணத்தில் டுகாடி பனிகேல் வி 2 அறிமுகம்


கருப்பு வண்ணத்தில் டுகாடி பனிகேல் வி 2  அறிமுகம்
x

டுகாடி நிறுவனம் தனது பனிகேல் வி 2 மாடல் மோட்டார் சைக்கிளில் முழுவதும் கருப்பு வண்ணத்திலான சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது. பொதுவாக டுகாடி மோட்டார் சைக்கிள் சிவப்பு வண்ணத்தில்தான் வெளி வரும்.

கருப்பு மற்றும் அடர் கிரே வண்ணக் கலவையாக ஆங்காங்கே சிவப்பு கோடுகள் பளிச்சிட மிக அழகுற வந்துள்ளது. வி 2 என்ஜினுடைய இந்த மோட்டார் சைக்கிள் 955 சி.சி. திறன் கொண்ட சூப்பர் குவாட்ரோ இரட்டை சிலிண்டரைக் கொண்டது. இது யூரோ 5 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையிலானது. 155 ஹெச்.பி. திறனை 10,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப் படுத்தும்.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.20.27 லட்சம்.



Next Story