பி.எம்.டபிள்யூ. இஸட் 4 ரோட்ஸ்டர் அறிமுகம்


பி.எம்.டபிள்யூ. இஸட் 4 ரோட்ஸ்டர் அறிமுகம்
x

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இஸட் 4 ரோட்ஸ்டர் என்ற பெயரிலான புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.

மேற்கூரை திறந்து மூடும் வகையி லானது. இது முழுவதும் வெளிநாட்டில் தயாரானது. இங்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. ஸ்போர்ட்ஸ் மாடலாக சாகச பயணம் மற்றும் நீண்ட தூர பயணத்தைத் தேர்வு செய்வோருக்காக வந்துள்ளது. இதற்கேற்ப சக்தி வாய்ந்த என்ஜின், அனைத்து சக்கர சுழற்சி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவர் பயணிக்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.89,30,000.

முன்புறம் கிட்னி வடிவிலான கிரில்லைக் கொண்டது. புதிய வடிவிலான எல்.இ.டி. முகப்பு விளக்கு, பெரிய அளவிலான பானட் கொண்டது. 19 அங்குல அலாய் சக்கரம், ஸ்போர்ட்ஸ் பிரேக் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். 3 லிட்டர் என்ஜினைக் கொண்ட இது 250 கிலோவாட் / 340 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். காரை ஸ்டார்ட் செய்து 4.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் 8 ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேடிக் கியர் வசதி, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. அடாப்டிவ் நேவிகேஷன் சிஸ்டம், முப்பரிமாண வரைபடங்கள், அடுத்த தலைமுறை பி.எம்.டபிள்யூ. ஐ-டிரைவ் இணைப்பு, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே இணைப்பு, புளூடூத் இணைப்பு வசதிகளைக் கொண்டது.

பார்க்கிங் அசிஸ்டென்ட், டிரைவிங் அசிஸ்டென்ட் வசதி உடையது. ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. 12 ஸ்பீக்கர்கள் இனிய இசையை வழங்கும். வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், மூன்று விதமான (எகோபுரோ, கம்பர்ட், ஸ்போர்ட்) ஓட்டும் நிலைகளையும் கொண்டது. முன்புறம், பக்கவாட்டுப் பகுதிகளிலும் ஏர்பேக் உள்ளது. ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் வெகிக்கிள் இம் மொபி லைஸர், விபத்து உணர்த்தி, ஸ்டெப்னி உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளது.


Next Story