பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 எம் 40 ஐ அறிமுகம்


பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 எம் 40 ஐ அறிமுகம்
x

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ் 3 எம் 40 ஐ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த காரை விற்பனை செய்ய உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொகுசான பயணம் மற்றும் மிகச் சிறப்பான செயல்திறன் ஆகிய இரண்டும் ஒருங்கே சேர்ந்த தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.86,50,000. அடாப்டிவ் எல்.இ.டி. முகப்பு விளக்கு மேட்ரிக்ஸ் செயல்பாட்டுடன் வந்துள்ளது. 20 அங்குல அலாய் சக்கரம் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. கிட்னி வடி விலான முன்புற கிரில், நிறுவனத்தின் பெயரை பறைசாற்றுவதாக உள்ளது.

திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, உங்களது ரசனைக்கேற்ப விளக்கொளி வசதி, தானியங்கி குளிர்சாதன வசதி ஆகியன சொகுசான பயணத்தை உறுதி செய்கின்றன.

இதில் இரட்டை டர்போ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 360 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதை ஸ்டார்ட் செய்த 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆகும். இது 8 ஆட்டோமேடிக் ஸ்டெப்ட்ரோனிக் கியர்களைக் கொண்டது.

குரூயிஸ் கண்ட்ரோல், ஏ.டி.பி. உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. ஆன்டிலாக் பிரேக்கிங் (ஏ.பி.எஸ்.) வசதி, டைனமிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல், பக்கவாட்டு பாதிப்பு பாதுகாப்பு வசதி கொண்டது. குழந்தை கள் பயணிப்பதற்கான இருக்கை வசதி (ஐ-சோபிக்ஸ்) உள்பட 6 ஏர் பேக்கு களைக் கொண்டதாக இது வந்துள்ளது.


Next Story