பஜாஜ் பல்சர் என்.எஸ் 200.
பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் புதிதாக வெளி வந்துள்ளது பல்சர் என்.எஸ் 200. இதில் மேலிருந்து கீழாக இயங்கும் வகையிலான முன்சக்கர போர்க் உள்ளது. இது வழக்கமான டெலஸ்கோப்பிக் போர்க்கை விட முற்றிலும் மாறுபட்டதாகும். இது வாகனத்தை சிறப்பாகக் கையாள உதவுகிறது. வாகனம் எந்த கியரில் செல்கிறது என்பதை உணர்த்தும் கியர் இண்டிகேட்டர், எத்தனை கி.மீ. தூரத்தில் பெட்ரோல் தீர்ந்துபோகும் என்பதை உணர்த்துவது, ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
இதில் 18 கிலோவாட் திறனை வெளிப்படுத்தும் டிரிபிள் ஸ்பார்க் எப்.ஐ. லிக்விட் கூல்டு டி.டி.எஸ். ஐ என்ஜின் உள்ளது. இது 199.5 சி.சி. திறன் கொண்டது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 36 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளன. 12 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்ப முடியும். இதன் உயரம் 805 மி.மீ. ஆகும்.
இது 24.13 பி.ஹெச்.பி. திறனையும், 18.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடிய லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. நான்கு வால்வு மற்றும் 3 ஸ்பார்க் பிளக்குகளைக் கொண்டது.
பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. டி.ஆர்.எல். வசதியை ஒருங்கே கொண்டதாக வடிவமைக்கப்பட்ட முகப்பு விளக்கு இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இது வாகன செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிவிக்கும்.
கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள என்.எஸ் 200 மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.1,47,347.