ஆடி கியூ 8, ஸ்போர்ட்பேக் அறிமுகம்


ஆடி கியூ 8, ஸ்போர்ட்பேக் அறிமுகம்
x

பிரீமியம் மற்றும் சொகுசு மாடல் கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் கியூ சீரிஸில் கியூ 8 மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. கியூ 8 மாடலில் கியூ 8 இ-டிரான் 50, கியூ 8 இ-டிரான் 55 என இரண்டு வேரியன்ட்களும், ஸ்போர்ட்பேக் மாடலில் கியூ 8 இ-டிரான் ஸ்போர்ட்பேக் 50, கியூ 8 இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55 என இரண்டு வேரியன்ட்களும் வந்துள்ளன.

இந்த கார் முழுவதும் பேட்டரியில் ஓடக்கூடிய எஸ்.யு.வி. மாடலாகும். முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் 600 கி.மீ. வரை இயங்கக்கூடிய திறன் கொண்ட பேட்டரிகள் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் 114 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளதால் இவை 340 ஹெச்.பி. மற்றும் 408 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். இவற்றின் இழுவிசை திறன் 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை ஆகும். கார் இயங்கும்போதே பேட்டரிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சார்ஜிங் மோட்டாரும் உள்ளது.

உள்புறத்தில் 10.1 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 அங்குல தொடு திரையில் ஹெச்.வி.ஏ.சி. கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இனிய இசையை வழங்க 16 ஸ்பீக்கர்கள் உள்ளன. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி கொண்டது.

கியூ 8 இ-டிரான் 50 விலை சுமார் ரூ.1.14 கோடி.

கியூ 8 இ-டிரான் 55 விலை சுமார் ரூ.1.26 கோடி.

கியூ 8 இ-டிரான் ஸ்போர்ட்பேக் 50 விலை சுமார் ரூ.1.18 கோடி.

கியூ 8 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 விலை சுமார் ரூ.1.30 கோடி.


Next Story