மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் வெலார்


மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் வெலார்
x

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் காரில் வெலார் மாடல் மிகவும் பிரபலமானது. தற்போது இந்தக் காரில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் புகுத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.93 லட்சம்.

இந்த மாடலில் பிக்ஸெல் எல்.இ.டி. விளக்குகள், டி.ஆர்.எல். விளக்குகள் புதிய வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளன. 11.4 அங்குல அளவிலான தொடுதிரை, லேண்ட் ரோவரின் பி.வி. புரோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய வசதிகள் இதில் உள்ளன. 250 ஹெச்.பி. திறன், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்ட 2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் டீசல் மாடல் 240 ஹெச்.பி. திறனையும், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இரண்டு மாடலுமே 8 கியர்களைக் கொண்டவை.

பெட்ரோல் மாடல் காரை ஸ்டார்ட் செய்த 7.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 217 கி.மீ. டீசல் மாடல் 100 கி.மீ. வேகத்தை 8.3 விநாடிகளில் தொட்டுவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கி.மீ. இதில் ஏர் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காரில் ஏறி அமரும்போது 40 மி.மீ. வரை தாழ்ந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளது.


Next Story