கன்னி - வார பலன்கள்
நேர்மையான எண்ணங்கள் நிறைந்த கன்னி ராசி அன்பர்களே!
உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற உறவினர்கள் உதவிகரமாகச் செயல்படுவார்கள். பணவரவுகள் தேவையான நேரத்தில் வந்துசேரும். பழைய பொருட்கள் சிலவற்றை மாற்றி, புதியதை வாங்குவீர்கள். உறவினர் தொடர்பான விஷயங்களுக்காகப் பயணம் செய்ய நேரிடும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசர வேலைகள் வந்து சேரலாம். உயரதிகாரிகள் விருப்பப்படி முக்கியப் பணி ஒன்றை செய்து கொடுத்து பாராட்டுப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி அவரது வேலையை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படலாம். குடும்பத்தில் புதிய பொருட்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை அணிவித்து வணங்குங்கள்.