கன்னி - வார பலன்கள்
ஆன்மிக ஈடுபாடு மிகுந்த கன்னி ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை காலை 8.52 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 3.20 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பணப்பரிவர்த்தனையில் நிதானமானப் போக்கு அவசியம். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்த்திடுங்கள். செய்யும் காரியங்களில் தடைகள் வந்தாலும், தளராத மனதுடன் போராடி வெல்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களின் உயர் அதிகாரி விருப்பப்படி முக்கியமான வேலை ஒன்றை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். இரவு, பகலாக பணியாற்றி சோர்வடைய நேரிடும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்க, கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். கலைஞர்களுக்கு, புதிய பணிகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் பெற அன்றாட நிலவரங்களை கண்காணியுங்கள்.
பரிகாரம்:- புதன்கிழமை அன்று நவக்கிரக சன்னிதியில் உள்ள புதனுக்கு, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்யுங்கள்.