கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 3 Feb 2023 1:16 AM IST (Updated: 3 Feb 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்ந்த நுண்ணறிவு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

தீவிர முயற்சியால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு பயனளிக்கும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளால் சில சலுகைகளைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, புதிய வேலைகள் வந்துசேரும். அவற்றை குறித்த காலத்தில் செய்து கொடுக்க அதிக உழைப்பும், கவனமும் தேவைப்படும். கூட்டுத் தொழிலில், போட்டிகளால் லாபம் குறையக் கூடும். பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் காணப்படும்.

கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களிலேயே போதிய வருமானம் ஈட்டுவார்கள். சகக்கலைஞர்கள், உங்களுக்காக புதிய ஒப்பந்தம் பெற முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பழைய கடன் தொல்லையால் சிறு, சிறு மனக்கசப்புகள் உருவாகலாம். கொடுக்கல்-வாங்கலில் நிதானப்போக்கு தேவை.

வழிபாடு:- புதன்கிழமை அன்று லட்சுமி நரசிம்மருக்கு, நெய் தீபமிட்டு வழிபட்டால் இன்னல்கள் விலகும்.


Next Story