கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Dec 2022 1:53 AM IST (Updated: 9 Dec 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

சிந்தனை தெளிவு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

நற்பலன்களுக்குக் குறைவில்லாத வாரம் இது. எனினும் சகோதர வழியில் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் வழக்கமான பணியில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது அவசியம். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெற இது வழிவகுக்கும்.

தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். வருமானம் இருந்தாலும், வேலையில் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியது அவசியம்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொண்டிருப்பர். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஓரளவு இணக்கமான சூழ்நிலை காணப்படும். சில சமயத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகன வகையில் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. சகோதர வழியில் கவலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல கற்றுக்கொள்ளுங்கள். ஆன்மிகப் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.

பரிகாரம்:- புதன்கிழமை பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சோதனைகள் விலகும்.


Next Story