கன்னி - வார பலன்கள்
கனிவான பேச்சால் கவர்ந்திழுக்கும் கன்னி ராசி அன்பர்களே!
ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் எண்ணம் போல், அவசர வேலை ஒன்றை உடனடியாக செய்து முடிப்பீர்கள்.
சொந்தத் தொழில் சிறப்புடன் நடந்து வரும். புதிய வாடிக்கையாளரின் வருகை அதிக வருமானத்தை அளிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குறைவில்லா லாபத்துடன் வியாபாரம் வளர்ச்சி பெறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கடன்கள் பெரிய அளவில் கவலையைத் தராது. மங்கல நிகழ்ச்சிகளால் பெண்களின் மனம் மகிழும். குல தெய்வ கோவிலுக்குச் செல்வது பற்றி ஆலோசிப்பீர்கள். கலைஞர்கள் வாழ்வில் களிப்பான திருப்பம் வரும். பங்குச்சந்தையில் லாபம் மிகுந்து காணப்படும். புது நண்பரின் ஆலோசனை லாபத்தை உண்டாக்கும். அன்றாட நிலவரங்களையும் கவனித்து வருவது நல்லது.
பரிகாரம்: குரு பகவானுக்கு வியாழக்கிழமை அன்று வில்வ மாலை சூட்டி வணங்கினால், செல்வ வளம் பெருகும்.