இன்றைய ராசிபலன் - 16.10.2024


இன்றைய ராசிபலன் - 16.10.2024
x
தினத்தந்தி 16 Oct 2024 1:00 AM GMT (Updated: 16 Oct 2024 6:52 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ்: குரோதி வருடம், புரட்டாசி மாதம் 30ம் தேதி புதன்கிழமை

ஆங்கிலம்: அக்டோபர் 16ம் தேதி 2024

நட்சத்திரம்: இன்று மாலை 7.13 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று மாலை 7.55 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம்: காலை 9.15 to 10.15

நல்ல நேரம்: மாலை 4.45 to 5.45

ராகு காலம்: மாலை 12.00 to 1.30

எமகண்டம்: காலை 7.30 to 9.00

குளிகை: காலை 10.30 to 12.00

கௌரி நல்ல நேரம்: காலை 10.45 to 11.45

கௌரி நல்ல நேரம்: மாலை 6.30 to 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: ஆயில்யம், மகம்

ராசிபலன்:

மேஷம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உணவு விசயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தவரை பார்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

காய்கறி வியாபாரிகள் பயனடைவர். உணவு விசயத்தில் கவனம் தேவை. அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். பிள்ளைகள் நன்கு படிப்பர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் குடும்பத்தில் மதிப்பு உயரும். உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. பண வரவு தாமதப்படும். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மட்டும் மிகவும் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். மகளின் திருமணத்தை பற்றி முடிவெடுப்பர். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கன்னி

கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். இளைஞர்கள் காதலில் எச்சச்ரிக்கையாக இருப்பது நலம். குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

துலாம்

சுப காரியங்கள் தாமதமாகும். உத்யோத்தில் தாங்கள் நினைத்தவாறே திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு பொறுப்புகள் கூடும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். மளிகைக் கடைவியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். ஆரோக்கிய நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

தனுசு

மனைவி வழியில் ஆதரவு பெருகும். தங்கள் பிள்ளைகளுக்கு திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு. செலவுகள் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மகரம்

விரும்பிய நபரை கைபிடிப்பீர்கள். அறுவை சிகிச்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். இன்று குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் சக ஊழியர்களிடம் தங்கள் சொந்த விசயங்களை பேசாமல் இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் விரும்பியவாறே வேலைகள் சுலபமாக அமையும். இன்று குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. பெண்களுக்கு தாங்க நினைத்தவாறே நல்ல வரண் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு






Next Story