இன்றைய ராசிபலன் - 20.12.2024


இன்றைய ராசிபலன் - 20.12.2024
x

இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 05.07 வரை ஆயில்யம் பின்பு மகம்

திதி: இன்று பிற்பகல் 1.55 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 01.15

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூராடம்

ராசிபலன்:-

மேஷம்

நண்பர் உங்களிடம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார். குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிசன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடன் தீரும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். சேமிப்பை துவங்குவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மனம் அமைதியைத் தேடும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். தங்கள் சேமிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும். சிலருக்கு காதல் கண்சிமிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். மூத்த சகோதரரால் நன்மை விளையும். மனதில் மகிழ்ச்சி நிலவும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர். உங்கள் உடல் நலம் சிறப்படையும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை

துலாம்

வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். வரவேண்டிய பாக்கித்தொகைகள் வசூலாகிவிடும். ஆலயங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொறுப்பு ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள்.குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். குடும்ப சொத்து பற்றிய வில்லங்களும் சொத்து பிரிச்சினைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

இன்று பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். சிறு தூர பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும். காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


Next Story