இன்றைய ராசிபலன் - 14.12.2024


இன்றைய ராசிபலன் - 14.12.2024
x
தினத்தந்தி 14 Dec 2024 6:37 AM IST (Updated: 14 Dec 2024 6:44 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 29-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 4.56 வரை கிருத்திகை பின்பு ரோகினி

திதி : இன்று மாலை 04-16 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி

யோகம் : அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் : காலை 7.45 - 8.45

நல்ல நேரம் : மாலை 4.45 - 5.45

ராகு காலம் : காலை 04.30 - 06.00

எமகண்டம் : காலை 1.30 - 3.00

குளிகை : மாலை 06.00 - 7.30

கௌரி நல்ல நேரம் : காலை 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் : மாலை 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : சித்திரை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். தேகம் பலம்பெறும். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

சுய தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் உள்ள சிக்கல்களை சரிபார்ப்பர். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உண்மையாக இருப்பர். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

உத்யோகத்தில் மதிப்பு கூடும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும். உறவினர்கள் வருகை உண்டு. தேக ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் விடுமுறையை உறவினர் வீட்டில் கழிப்பர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர்.வியாபாரம் சூடு பிடிக்கும். செலவு கூடும். சிக்கனம் தேவை. பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

சொந்த தொழில்புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். காதலர்களின் அன்பு பலப்படும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்





Next Story