இன்றைய ராசிபலன் - 13.01.2025


இன்றைய ராசிபலன் - 13.01.2025
x
தினத்தந்தி 13 Jan 2025 7:50 AM IST (Updated: 13 Jan 2025 7:51 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

கிழமை: திங்கட் கிழமை

தமிழ் வருடம்: குரோதி

தமிழ் மாதம்: மார்கழி

நாள்: 29

ஆங்கில தேதி: 13

ஆங்கில மாதம்: ஜனவரி

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 11.23 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி : இன்று காலை 05-20 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி

யோகம் : சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.30 முதல் 7.30 வரை

நல்ல நேரம் மாலை: 4.30 முதல் 5.30 வரை

ராகு காலம் காலை : 07.30 முதல் 09.00 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 வரை

குளிகை மாலை : 1.30 முதல் 3.00 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை

கௌரி நல்ல நேரம்: மாலை 7.30 முதல் 8.30 வரை

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். படிப்பில் முன்னேற்றம் காண்பர்.இணைய தளம் மூலமாக தொழில் விருத்தி பெறும். தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும். ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

இதுவரை இழுத்து கொண்டிருந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக அமையும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மனைவி வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

சிம்மம்

கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கௌரவப் பதவி தேடி வரும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வயதானவர்கள் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

துலாம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது.புது டிசைனில் வாகனம் வாங்குவீர்கள். பொதுப்பணிகளில் உள்ளவர்கள் சகாக்களின் ஆதரவுப் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

உடல் உஷ்ணத்தால் பாதிக்கும். குளிர்ந்த காய்கறிவகைகள் மற்றும் இளநீர், மோர் என சேர்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களுக்கு சிறிய வாய்ப்புகள் என்றாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்குவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

பின்பு தாங்கள் எண்ணிய கதாபாத்திரம் கைக்கு வரும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச் செல்வம் இல்லாதவருக்கு அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

இது வரை சொந்த-பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் தாங்கி கொண்டிருந்த நீங்கள் தற்போது அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். மதிப்பும் பரியாதையும் கூடும். பிள்ளைகளின் வரனிற்காக பார்ப்பதற்கு பதிவு செய்வர். திருமணம் கை கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு





Next Story