இன்றைய ராசிபலன் - 12.01.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
ஜனவரி 12
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
தமிழ் வருடம்: குரோதி
தமிழ் மாதம்: மார்கழி
நாள்: 28
ஆங்கில தேதி:12
ஆங்கில மாதம்:ஜனவரி
வருடம்:2025
நட்சத்திரம்:இன்று காலை 11.46 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
திதி: இன்று அதிகாலை 04-58 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம்:சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 7.30 - 8.30
நல்ல நேரம் மாலை: 3.30 - 4.30
ராகு காலம் காலை: 04.30 - 06.00
எமகண்டம் காலை: 12.00 - 1.30
குளிகை மாலை: 3.00 - 4.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கை, கால் வலி வந்துப் போகும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
ரிஷபம்
பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. வயது முதிர்ந்த பெண்கள் திருமண வாழ்க்கைப் பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மிதுனம்
உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். படிப்பில் முன்னேற்றம் காண்பர்.இணைய தளம் மூலமாக தொழில் விருத்தி பெறும். தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
நல்ல வரண் அமையும். கூடுமானவரை திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவர். முகப் பொலிவு கூடும். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். சகோதரர் உங்கள் தேவையறிந்து உதவிகரமாக இருப்பார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உடலில் மாதவிடாய் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
புதிய நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் பெரிய விசயங்கள் முடியும். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உடல் நலம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். தோல் வியாதிகள் வந்து போகும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும்.பிள்ளைகள் எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீரகள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
அரசியல்வாதிகள் தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். புதிய பொறுப்புகள் தங்களை வந்தடையும். மாணவர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் அன்றி அதிக மதிப்பெண்களை ஈட்டுவது அரிதாகும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை