இன்றைய ராசிபலன் - 10.01.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் மார்கழி மாதம் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.41 வரை கிருத்திகை பின்பு ரோகினி
திதி: இன்று காலை 10.02 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம்: சித்த, மரண யோகம்
நல்ல நேரம்: காலை 09.30 - 10.30
நல்ல நேரம்: மாலை 04.30 - 05.30
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மாலை 03.00 - 04.30
குளிகை: காலை 07.30 - 09.00
கௌரி நல்ல நேரம்: காலை 12.30 - 01.30
கௌரி நல்ல நேரம்: மாலை 06.30 - 07.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: சித்திரை,சுவாதி
ராசிபலன்:
மேஷம்
தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பர். தேவையில்லாத மனபயம் நீங்கும். காதல் கசக்கும். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை வந்து வரும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். உடல் நலம் தேறும். பிள்ளையால் செலவு ஏற்படும். சிக்கனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
திருமண முயற்சிகள் வெற்றி தரும். பண உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். காதலர்கள் தங்கள் பொறுப்பறிவர். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்த உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் நடந்தேறும். வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோக திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
கடகம்
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
வருமானத்துக்கு வழி பிறக்கும். இளம் பெண்களுக்கு திருமண யோகம் உண்டு. காத்திருந்த இளைஞர்களுக்கு புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சில்லறைக்கடை வியாபாரிகள் தங்கள் கடையில் பணப்பொறுப்புகளை கையாளுபவர்களை கவனிப்பது மிக சிறப்பு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
நீண்ட நாட்களாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். எதிர்பார்த்த ஒரு முக்கிய காரியம் தங்கள் எண்ணப்படி நிறைவேறும். கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
துலாம்
சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
விருச்சிகம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தங்கள் தந்தை வழி சொத்தில் உள்ள வில்லங்கங்கள் நீங்கி இரு சாராரும் முடிவெடுப்பீர்கள். இடுப்பு வலி சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். தம்பதிகளுக்கு எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும். வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
பெரியவர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு