இன்றைய ராசிபலன் - 18.12.2024


இன்றைய ராசிபலன் - 18.12.2024
x
தினத்தந்தி 18 Dec 2024 6:45 AM IST (Updated: 18 Dec 2024 6:52 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் மார்கழி மாதம் 3-ம் தேதி புதன் கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 03-31 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி: இன்று பிற்பகல் 12-54 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-15 to 10-15

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: மாலை 12-00 to 1-30

எமகண்டம்: காலை 7-30 to 9-00

குளிகை: காலை 10-30 to 12-00

கௌரி நல்ல நேரம்: காலை 10-15 to 11-00

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்:வடக்கு

சந்திராஷ்டம் : கேட்டை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். பிடித்த நபரை சந்திப்பீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தேகம் பளிச்சிடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

பிள்ளைகளுக்கு விரும்பிய துறை கிடைக்கும். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடல் உஷ்ணமாகும். அதற்கேற்ற வகையில் உணவினை உட்கொள்வது நல்லது. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர். குடும்பப் பிரச்சினை சீராகும். கணவர் வழியில் உதவிகள் உண்டு. வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். கொடுக்கல்–வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

தொழில் சூடு பிடிக்கும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் பெருகுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள். மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். வெளியிடங்களில் உணவு உட்கொள்ள வேண்டாம். மாணவர்கள் திறன் கூடும். உடல் வலி நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

இன்று கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

ஆன்மீகத்தில் மனம் நாடும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல ஒரு பரஸ்பர உறவு ஏற்படும். கோபம் வரும்போது பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

வழக்கில் திருப்பம் நிகழும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

தாமதித்த பணம் கைக்கு வரும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வரவேண்டிய பதவி தேடி வரும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தங்கள் நீண்ட நாள் கனவு பலிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும். பிரிந்தவர் ஒன்று சேருவர். சேமிப்பில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்


Next Story