இன்றைய ராசிபலன் - 17.12.2024
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் மார்கழி மாதம் 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்:இன்று அதிகாலை 03-17 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
திதி : இன்று பிற்பகல் 01-11 வரை துவிதியை பின்பு திரிதியை
யோகம் : சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-45 to 08-45
நல்ல நேரம் :மாலை 4-45 to 5-45
ராகு காலம் :மாலை 03-00 to 04-30
எமகண்டம் : காலை 09-00 to 10-30
குளிகை மாலை: 12-00 to 1-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45
கௌரி நல்ல நேரம் :மாலை 7-30 to 8-30
சூலம் :வடக்கு
சந்திராஷ்டம் :அனுஷம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
பெண்களுக்கு வேலை கிடைக்கும். மார்கெட்டிங்பிரிவினர் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொகை வைப்புநிதியாக செலுத்துவீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்வர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கடகம்
தேக்க நிலையில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். அதில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். கண் சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. கண்ணை பரிசோதனை செய்வது நல்லது. நீண்ட காலமாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும். ஆன்மீக செலவுகளுக்கும் இடம் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
நண்பர்களிடையே சிறு மனஸ்தாபங்கள் நேரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எனவே, சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக கவனம் தேவை. பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். தேகம் பளபளக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதாலல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு
சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும். பிடித்தவர்களின் எதிரபாராத சந்திப்பு நிகழும். மாமனார் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மகரம்
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வீடு மனை வாங்கும் போது ஆவணங்களை சரிபார்ப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிக்கான காலம் வந்துள்ளது. மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
பயணங்களால் ஆதாயம் உண்டு. திருமணம் நடந்தேறும். உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
மனைவி வழியில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாள்வீர்கள். சுப நிகழ்ச்சிக்கு வித்திடுவீர்கள். மாணவர்கள் விரும்பிய துறையில் சேர தற்போதிலிருந்தே நன்கு படிப்பது நல்லது. இளைஞர்கள் விரும்பியவரை கைபிடிப்பர்.உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை