விருச்சகம் - வார பலன்கள்
குறையின்றி காரியங்களைச் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!
சிறு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். கடந்த கால கசப்பு மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தள்ளிவைத்த காரியம் ஒன்றை உடனடியாக செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைப்பளுவால் அவதிப்படுவர். கூட்டுத் தொழிலில் போட்டிகள் காரணமாக வியாபாரம் சுமாராக நடைபெறும். முடிவுகளை கூட்டாளிகளுடன் இணைந்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் ஏற்படக்கூடும். பெண்கள், சகோதர இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மனவேறுபாடு உண்டாகக்கூடும். கலைஞர்கள், சகக் கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.